தெற்காசிய நாடுகளான பங்களாதேஷ், நேபாளம், இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் நாட்டிற்கு வந்தவுடன் 21 நாட்கள் ஒரு குறிப்பிட்ட தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்று மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகெங்கிலும் வெவ்வேறு மற்றும் ஆபத்தான கொரோனா வைரஸ் வகைகளின் விரைவான பரவலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ், இந்தியா, இலங்கை, நேபாளம் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் மலேசியர்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்களுக்கும் கட்டாய தனிமைப்படுத்தப்பட்ட காலம் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மலேசியாவின் சுகாதார பணிப்பாளர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்தார்.

மேற்கூறிய நாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் அரசாங்கத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.