துமிந்த சில்வாவின் விடுதலைக்கு ஐ.நா. விசனம்

Published By: Vishnu

25 Jun, 2021 | 09:09 AM
image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை விசனம் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமை சபை தனது டுவிட்டர் பக்கத்தில்,

சக அரசியல்வாதியின் கொலைக்கு தண்டனை பெற்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்தா சில்வாவுக்கான ஜனாதிபதி மன்னிப்பு விடுதலையானது, தேர்ந்தெடுக்கப்பட்ட, தன்னிச்சையாக மன்னிப்பு வழங்குவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும்.

இது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துவதுடன், பொறுப்புக்கூறலையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று பதிவிட்டுள்ளது.

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை குற்றச்சாட்டில் மரண தண்டனை அனுபவித்து வந்த துமிந்தா சில்வா, சிறப்பு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நேற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர 2011 இல் கொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வாவுடன் மேலும் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. 

நேற்றைய ஜனாதிபதி பொது மன்னிப்பில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் உட்பட 93 கைதிகளும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டமையை நாம் வரவேற்கின்றோம் எனத் தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்ளிஸ்ட், துமிந்த சில்வாவின் விடுதலையானது சட்டத்தின் ஆட்சியைக் கேள்விக்குறியக்கியுள்ளதாகவும் நேற்று கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்வதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே உடன்பட்டிருக்கும் பொறுப்புக்கூறல் மற்றும் சமத்துவமான நீதி ஆகியவை உறுதிசெய்யப்படுவது அவசியமாகும் என்றும் அவர் வலியுறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11
news-image

வவுனியா - தோனிக்கல் பகுதியில் கேரள...

2025-02-10 13:16:05
news-image

கெப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச்...

2025-02-10 12:45:06
news-image

ஹட்டனில் சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு

2025-02-10 13:10:27
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே மீண்டும்...

2025-02-10 13:13:37
news-image

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து...

2025-02-10 12:19:52
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிரான பிடியாணை உத்தரவு...

2025-02-10 12:15:39