மனைவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இராணுவ லெப்டினன் கேர்ணல் பிரதீப் குமார நிசாங்கவை எதிர்வரும் 09 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (31) கடுவலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு அத்துருகிரிய பகுதியில் வைத்து பிரதீப் குமார நிசாங்கவின் மனைவி மீது இனந்தெரியாத குழுவொன்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில், காயமடைந்த அவர் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.