ஆபிரிக்காவில் கடின முனைகளைக் கொண்டுள்ள 'சீன மென்மை அதிகார திட்டம்' 

25 Jun, 2021 | 09:41 AM
image

சீனா குறித்து ஒரு கனிவான, மென்மையான  பிம்பத்தை உருவாக்குமாறு ஜனாதிபதி  ஜி ஜின்பிங் சமீபத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

உலகளாவிய பொது - கருத்து மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டிருந்தது. மேலும் ' எமது தொனியை சரியாக அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும், திறந்த மற்றும் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும், ஆனால் அடக்கமாகவும் தாழ்மையாகவும் இருக்க வேண்டும், மேலும் சீனாவின் நம்பகமான, அன்பான மற்றும் மரியாதைக்குரிய பிம்பத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும்' என சீன ஜனாதிபதி கூறியதாக  சின்ஹுவா செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் சீனாவின் மென்மை அதிகார திட்டங்களுக்கான சோதனைக் களமாக ஆபிரிக்கா மாறியள்ளது. குறிப்பாக சீனாவின் சமீபத்திய தடுப்பூசி  வழங்கல் ஆப்பிரிக்க நாடுகளுக்கு நூற்றுக்கணக்கான மருத்துவ பொருட்களை நன்கொடையாக வழங்குவது உட்பட சீன இராஜதந்திரம் வெளிப்பட்டுள்ளது. ஒரு சுரண்டல் மூலோபாயத்தை பின்பற்றுகிறது என்ற விமர்சனங்களுக்கு மத்தியில், சீனாவை ஒரு நேர்மறையான, தீங்கற்ற வளர்ச்சி பங்காளியாக சித்தரிக்கவும், ஆப்பிரிக்காவுடனான வளர்ந்து வரும் உறவுகளைச் சுற்றியுள்ள சந்தேகங்களைத் தணிப்பதற்குமான முயற்சியாகவும் இதுவுள்ளது.

சீன நிறுவனங்கள் 2005  ஆப்பிரிக்காவில் நிலைக்கொண்டுள்ளதுடன் 2019 ஆகுகையில் 53 நிறுவனங்களாக அதிகரித்துள்ளன. இந்த  நிறுவனங்களானது அதிகாரப்பூர்வமாக மொழி மற்றும் கலாச்சாரத்தைக் கற்றுக்கொள்வதற்கான இடங்களாகவே காணப்படுகின்றன. ஆனால், அவை கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கான தளங்கள், முக்கியமான பிரச்சினைகள் குறித்த விவாதங்களை தணிக்கை செய்தல் மற்றும் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட மாநில பிரச்சாரங்களை முன்னெடுத்தல் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுப்படுவதாகவே உள்ளன.

மறுப்புறம் இந்த நிறுவனங்கள் ஊடாக சீன நிதியுதவி உதவித்தொகைகளும் ஆபிரிக்காவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிதி தொகை அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்தவர்களை விடவும் அதிகமானதாகும். இவை அனைத்தும் ஆப்பிரிக்க கண்டத்தில் வளர்ந்து வரும் சீனாவின் மென்மை அதிகார திட்டத்திற்கான முதலீடுகளின் ஒரு பகுதியாகவே உள்ளன.

ஆபிரிக்காவில் சீன கலாச்சார இராஜதந்திரத்தை உயர்த்தும் முயற்சியாக, வசந்த விழா கொண்டாட்டங்கள் போன்ற பெரிய கலாச்சார விழாக்களுக்கு நிதியளித்து ஏற்பாடு செய்கிறது. இவை அங்குள்ள இளைய சமூகத்தை ஈர்க்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன. சாதாரண மக்களிடையே உண்மையான பரிமாற்றங்களை முன்னேற்றுவதை விட நேர்மறையான ஊடகக் பிரசாரங்கள் மூலம் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஆடம்பரமான நிகழ்வுகளாகவும் இவை உள்ளன.

சீன புலம்பெயர்ந்தோர் மீது ஆப்பிரிக்க மக்களிடையே அதிருப்தி வெளிப்பட்டுள்ளது. அண்மையில் குவாங்சோவில் ஆபிரிக்கர்கள் மோசமாக நடத்தப்பட்டமை போன்ற சம்பவங்களால் இரு இனங்களுக்கும் இடையில் வலுவான மொழியியல் மற்றும் கலாச்சார உறவுகள் இல்லை. இந்நிலையில், சீனர்களுக்கும் ஆபிரிக்கர்களுக்கும் இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் சீனா தனது கலாசார இராஜதந்திரத்தை ஆபிரிக்க கண்டத்தில் வலுப்படுத்தி வருகின்றது.

மறுபுறம், மேற்கத்திய ஊடகங்களை விட , சீன ஊடகங்கள் ஆபிரிக்க கண்டத்தில் ஒரு ஆழமான இருப்பை ஏற்படுத்தியுள்ளன. 2018 ஆம் ஆண்டில், சின்{ஹவா செய்தி சேவை  தனது  அலுவலகத்தை நைரோபியில் நிறுவியது. இதனை தொடர்ந்து சீனா குளோபல் டெலிவிஷன் நெட்வொர்க், சீனா டெய்லி மற்றும் சீன வானொலி  இன்டர்நேஷனல் அனைத்தும் கிழக்கு ஆபிரிக்காவை மையமாகக் கொண்டுள்ளன. ஏனைய சர்வதேச ஊடகங்களை விட சீன ஊ;கங்களின் பிரசன்னம் அதிகமாகும்.

இதை தவிர, தனியாருக்குச் சொந்தமான சீன தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் டைம்ஸும் ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் செயற்படுகின்றன. சீனாவின் பொருளாதாரத் திறனும் செல்வாக்கும் ஆப்பிரிக்க ஊடகங்களின் தனித்துவத்திற்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.

இது தவிர, சீன அரசாங்கம் ஆப்பிரிக்க ஊடகவியலாளர்களுக்கு சீனாவுக்கான பயிற்சி பயணங்களுக்கு  தவறாது நிதியுதவி செய்கிறது. பயிற்சியின் பின்னர், இந்த பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் சீன பிரச்சார நடவடிக்கைகளுக்கு  ஈர்க்கப்படுகின்றனர். அதே போன்று ஆப்பிரிக்காவின் உள்ளூர் விளையாட்டுச் சந்தைகளின் மீது கட்டுப்பாட்டைப் பெறுவதற்கும், ஆப்பிரிக்காவின் முக்கிய விளையாட்டு நிகழ்வுகளுக்கான அணுகலைப் பெறுவதற்கும் பெய்ஜிங்  தீவிரமாக செயற்படுகிறது.

இந்த முயற்சியானது கட்டுப்பாடு மற்றும் பொருளாதார நலனகளை  இலக்காகக் கொண்டுள்ளது. அதே நேரம், தேவையை வளர்ப்பதற்காக, சீன அதிகாரிகள் பலர் ஆப்பிரிக்க நாடுகளில் விளையாட்டு வசதிகளை கட்டமைத்து வருகின்றனர். விளையாட்டு மைதானங்கள் மற்றும் விளையாட்டுத் தேவையான பயிற்சி வசதிகள் உள்ளிட்ட விளையாட்டு உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துகின்றனர். குறிப்பாக ஆபிரிக்க நாடுகளில் சீனா முதலீட்டால் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான மைதானங்கள் உட்பட ஏனைய திட்டங்கள் அனைத்துமே சீன கொள்கை திட்டத்தை உள்வாங்கியதாகும். வறுமை நாடுகளுக்கு செலுத்த முடியா கடனாகவும் மாறி விடுகின்றன.

எனவே தான் ஆபிரிக்க நாடுகளிலும் உலகின் பிற  வறுமை நாடுகளிலும் சீனாவின் கடன்-பொறி இராஜதந்திர முறை குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகின்றது. பொருளாதார ரீதியாக அவர்களைத் தாக்குவதற்கு அப்பால், ஒரு புதிய காலனித்துவ அமைப்பில் அவர்களை அடிமைப்படுத்தும் திறன் கொண்ட இந்த முறை சீனாவின் இராஜதந்திர உத்திகளில் முக்கியமானதாகும். ஆபிரிக்காவில் இதயங்களையும் மனதையும் வெல்வதற்கான சீனாவின் முயற்சிகளில் தீவிர போக்குள்ளது. ஆனால் அது எந்தளவு சாத்தியப்பாட்டை பெறும் என்பது கேள்விக்குறியாகும். ஆனால் சீனாவின் அதிகார மூலோபாய முறைமையில் தற்போது மென்மையான அதிகார திட்டம் முன்னிலைப்பெறுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22