வெள்ளவத்தையிலிருந்து , அங்குலானை வரையிலான கடற்கரையோரங்களில் நேற்று  இரவு எட்டு கடலாமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. 

அவற்றை அங்கிருந்து பரிசோதனைக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி கொழும்பு துறைமுக கடற்பரப்பிற்கு வெளியே எம்.வி. எக்ஸ்பிரஸ் கப்பல் தீப்பிடித்து எரிந்த்து.

அன்றிலிருந்து இன்று வரை 80 க்கும் மேற்பட்ட கடலாமைகள், 10 க்கும் மேற்பட்ட டெல்பின்கள் , திமிங்கலம் மற்றும் மின்கள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்.