நாட்டில் நேற்று 23.06.2021 கொரோனா தொற்றால் மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,814 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் நாளாந்தம் சுமார் 2000 கொவிட் தொற்றாளர்களும் 50 இற்கும் அதிக மரணங்களும் பதிவாகி வருகின்றன.

அதற்கமைய இன்று வியாழக்கிழமை மாலை 7 மணி வரை 1228 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதற்கமைய இதுவரையில் நாட்டில் 247 337 பேருக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டது. இவர்களில் 211 186 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 33 447 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே வேளை நேற்று முன்தினம் 65 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.