டயலொக் ஆசிஆட்டா மனுசத் தெரணவுடன் இணைந்து பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் தனி நபர்களுக்கு  நிவாரணம்

Published By: Gayathri

24 Jun, 2021 | 05:00 PM
image

கொந்தளிப்பான காலங்களில் நாட்டை மேம்படுத்துவதற்கான அதன் மிக சமீபத்திய முயற்சிகளில், இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மீண்டும் டிவி தெரணவுடன் கைகோர்த்து,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் நிவாரணம் வழங்குவதற்காக 'டயலொக் உடன் மனுசத் தெரண' முயற்சியினை   தொடங்கியுள்ளது.

இந்த நாடு தழுவிய முன் முயற்சி, நாட்டுக்கு தேவைப்படும் நேரத்தில் ஆதரிப்பதற்காக டயலொக் நடத்தி வரும் பல திட்டங்களின் ஒரு பகுதியாகும்.  மூன்று நாட்களில்  டயலொக் மற்றும் தெரண குழுவினர்  கம்பஹா, வத்தளை, கொழும்பு, கடுவேல, கொலோனாவை  மற்றும் காலி ஆகிய பிரதேச செயலகங்களுக்கு சுத்தமான குடிநீர், உலர் உணவுகள், மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

இவைத் தவிர, நாட்டில் கொவிட் 19 க்கு எதிரான தேசிய போராட்டத்திற்கும் டயலொக் இணையான ஆதரவினை வழங்கி வருகிறது. மனுசத்தெரணவுடனான டயலொக்கின் மூன்றாவது செயற்றிட்டம்  நாடளாவிய ரீதியில் உள்ள 34 மருத்துவமனைகள் தங்களது அன்றாட நடவடிக்கைகளைத் மேற்கொள்வதற்கும்  தேவையான அத்தியாவசிய பொருட்களையும் அதே சமயம்  ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவுகள் பிரப்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள 44,532 இலங்கையர்களுக்கு உலர் ரேஷன் பொதிகளையும்  வழங்கியது. 

இதேபோல், நாட்டில் கொரோனா வைரஸ் ஏற்பட்ட  முதல் இரண்டு சூழ்நிலைகளின்போது   'டயலொக் உடன்  மனுசத் தெரண' முயற்சி 22 மாவட்டங்களில் 400 க்கும் அதிகளவான  கிராமங்களில் 128,000 பேருக்கும் சுமார் 6 வாரங்கள் சேகரிக்கப்பட்ட   உலர் உணவு பொதிகளையும் இரண்டாவது முயற்சியின்போது  22 நாட்களில் 10 மாவட்டங்களில் உள்ள 46,000  மக்களுக்கும் உலர் உணவுகளை வழங்கியது. 

கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயத்தைக் குறைக்க அரசாங்க சுகாதார அதிகாரிகள் கட்டளையிட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களின்படியே உலர் உணவுகளை கொள்வனவு செய்தல், பொதி செய்தல் மற்றும் விநியோகித்தல் போன்ற முழு செயல்முறைகளும் மேற்கொள்ளப்பட்டன.

ஒரு பொறுப்பான நிறுவனம் என்ற வகையில், டயலொக் ஆசிஆட்டா நாட்டில் கொவிட் 19 இன் முதல் அறிகுறிகளின்போது  சிக்கலான சுகாதார உட்கட்டமைப்பின் மேம்பாட்டுக்காக  2000 இலட்சம் ரூபாய்க்கான உறுதி மொழியினை வழங்கியது.  

இந்த  உறுதிமொழி, நீர்கொழும்பு  மருத்துவமனை மற்றும் ஹோமாகம அடிப்படை மருத்துவமனையில் 10 படுக்கைகளை கொண்ட முழுமையான செயற்பாட்டுடன்கூடிய  தீவிர சிகிச்சை பிரிவுகளை (ICU) நிர்மாணிக்க உதவியது. மேலும் கொவிட் 19 தொற்றுநோயை ஒரு தேசமாக சமாளிப்பதற்கான கூட்டு முயற்சியை வலுப்படுத்தியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58