(செ.தேன்மொழி)

கொழும்பு வடக்கு ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் இரண்டு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்துடன் பெண்களிருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகத்துவாரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் 25 வயதுடைய யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து ஒரு கிலோ 21 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, கிரேண்ட்பாஸ் பகுதியில் 14 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் இரண்டு இலட்சத்து 91 ஆயிரத்து 200 ருபாய் பணத்துடன், 59 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.