கைதிகள் விடுதலையின் பின்னணியில் அரசியல் நாடகம் உள்ளதாக சந்தேகம்: இராதாகிருஷ்ணன்

Published By: J.G.Stephan

24 Jun, 2021 | 02:16 PM
image

(க.கிஷாந்தன்)
"தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட இதர நலன்புரி விடயங்களை தீர்மானிக்கின்ற கூட்டு ஒப்பந்தத்தை மீள புதுப்பிப்பதற்கு 5 தோட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்தாக பெருந்தோட்டத்துறை  அமைச்சர்  என்னிடம் தெரிவித்தார்.  ஏனைய நிறுவனங்கள் உயர்நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கின்றன. எனவே, கூட்டு ஒப்பந்தத்தை மீள கைச்சாத்திடுவதே சாலச்சிறந்ததாக அமையும்." என மலையக மக்கள் முன்னணியின்  தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், கொரோனா பரவல் மற்றும் மரணம் தொடர்பில் உரிய தரவுகள், உரியவகையில் வழங்கப்படாததாலேயே பயணத்தடையை நீடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதிக்கு தவறான தகவலை வழங்கியது இராணுவமா, சுகாதார பிரிவா என்பது தெரியாது. ஆனால்  உண்மையான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.

அதேபோல இரசாயன உரம் குறித்தும் ஜனாதிபதிக்கு தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாக வைத்து அவர் தீர்மானம் எடுத்துள்ளதால் தற்போது பிரச்சினை எழுந்துள்ளது. எனவே, உண்மை நிலைவரத்தை தேடி அறிந்து ஜனாதிபதி சிறந்த முடிவை எடுக்க வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கத்திலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அதில் நல்ல நோக்கம் இருந்தது. தற்போது இந்த அரசில் 16 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதன் பின்னணியில் அரசியல் உள்ளது. நாமல் ராஜபக்ச பாராளுமன்றத்தில் அறிவிப்பு விடுத்து இரு நாட்களில் விடுதலை இடம்பெறுகின்றது.  தமிழ் மக்கள் மீதுள்ள அக்கறையில் அவர்களை விடுத்திருந்தால் வரவேற்போம். 

ஆயிரம் ரூபா சம்பள உயர்வின் பின்னர் தோட்ட நிர்வாகங்களும், முகாமையாளர்களும் தன்னிச்சையாக, சர்வாதிகாரிபோல் செயற்படுகின்றனர். 20 கிலோ கொழுந்து பறிக்குமாறு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் சட்டத்துக்கு முற்றுபுள்ளி வைக்கவேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58