பிரேசிலில் ஒரே நாளில் 1,15,228 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,81,69,881 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு  சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஒரே நாளில்  2,392 பேர் உயிரிழந்துள்ளார்கள். கொரோனா உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 5,07,109 ஆக உயர்வடைந்துள்ளது.

பிரேசிலில் அதிக சனத்தொகை கொண்ட மாநிலமான சாவோ பாலோ கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு வைத்தியசாலைகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கட்டுப்பாடுகள் ஜூலை 15 வரை நீட்டிக்கப்படுகின்றன.

சாவோ பாலோ, மாடோ க்ரோசோ டோ சுல், சாண்டா கேடரினா மற்றும் பரணா உள்ளிட்ட பல மாநிலங்களில் சுகாதார பராமரிப்பு வசதிகளின் தேவை அதிகரித்துள்ளது.

உலகளாவிய ரீதியில்  அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக கொரோனாவால் அதிகம் உயிரிழப்புகள் பதிவாகிய நாடாக பிரேசில் உள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில்  அமெரிக்கா,இந்தியாவை தொடந்து பிரேசில் மூன்றாவது இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.