மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா,  ஜனாதிபதியின் விசேட  பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார் என சிறைச்சாலைகள் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பாக கொழும்பு உயர் நீதிமன்றம் 2016 இல் துமிந்தா சில்வாவிற்கு மரணதண்டனை விதித்தது.

மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள  துமிந்த சில்வாவின்  வழக்கினை மீண்டும் விசாரிக்க நியமிக்கப்பட்ட  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விடுதலை செய்ய பரிந்துரைத்தது.

இந்நிலையில், இன்று (24.06.2021) துமிந்த சில்வாவா ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.