கடந்த கால வலிகளும் இனிமையானது

Published By: Vishnu

24 Jun, 2021 | 11:26 AM
image

கடந்த காலங்களில் இரண்டு ஐ.சி.சி உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் தோல்வியுற்றதன் வலி சவுத்தாம்ப்டனில் அவர்கள் பெற்ற வெற்றியை இன்னும் சிறப்பானதாக ஆக்குகிறது என்று நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் வெற்றியாளர்களாக கிவிஸை பதிவுசெய்ய கேன் வில்லியம்சன் புதன்கிழமை பாடுபட்ட வேளையில் ரோஸ் டெய்லர் அவருக்கு பக்க பலமாக இருந்தார்.

இது தொடர்பில் கூறிய கேன் வில்லியம்சன், 

நிச்சயமாக இது ஒரு சிறப்பான உணர்வுதான். இரண்டு முறை கிண்ணத்துக்கு நெருக்கமாக சென்று கைகூடாமல் இறுதியில் பெரிய கிண்ணத்தை வெல்வது நிச்சயம் சிறப்பான ஒரு உணர்வை ஏற்படுத்துகிறது.

இறுதிப் போட்டியை வெல்வது தான் உச்சம் இல்லையா? முதலில் இந்திய அணிக்கும் விராட் கோலிக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்திய அணி ஒரு பிரமாதமான அணி, எத்தனை பெரிய சவால் என்பதை நாங்கள் அறிவோம்.

வெற்றி பெறுவதற்கான உணர்வை தொடர்ந்து தக்க வைத்தோம், கடைசியில் வென்றோம். இது ஒரு கிரேட் டெஸ்ட் மேட்ச். நான் நியூசிலாந்து கிரிக்கெட்டுடன் குறுகிய காலம் தான் இருந்து வருகிறேன், அதனால் இது ஸ்பெஷல் ஃபீலிங். எங்கள் வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் என்ற பட்டம் பெறுகிறோம்.

கடந்த 2 ஆண்டுகளில் 22 வீரர்கள் அணிக்காக ஆடியுள்ளனர், அவர்களின் பங்களிப்பு, உதவிப்பணியாளர்கள், பயிற்சியாளர்கள் பங்களிப்பு இல்லாமல் இது சாத்தியமில்லை. பாதுகாப்பதற்குரிய சிறந்த தருணமாகும் இது என்றார்.

புதன்கிழமை சவுத்தாம்ப்டனில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் அதிகாரப்பூர்வ உலக சாம்பியனான நியூசிலாந்து இந்தியாவை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்ததை அடுத்து, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் ஒரு சிறந்த நட்பைப் பகிர்ந்து கொண்டனர்.

கோஹ்லி மற்றும் வில்லியம்சன் தங்கள் யு-19 நாட்களில் இருந்து ஒருவரை ஒருவர் அறிந்திருக்கிறார்கள், மேலும் இரண்டு வருட ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் காலப் பகுதியிலும் இருவரும் ஒருவருக்கொருவர் பாராட்டுக்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

நியூசிலாந்து 50 ஓவர் உலகக் கிண்ணத்தில் அரையிறுதிக்கு எட்டு முறை சென்றுள்ளது. இரு ஒருநாள் உலகக் கிண்ணத்திலும் இரு முறை இறுதிப் போட்டியில் கால் பதித்தது.

2019 ஆம் ஆண்டு உலக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி முடிவுகளால் நியூஸிலாந்து அணியின் மனம் உடைந்தது.

 

தற்போதைய வெற்றியின் மூலம் 144 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்  சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் அணி என்ற சாதனையை நியூசிலாந்து பெற்றுள்ளது. 

கடந்த 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு  நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்திருந்த நிலையில், இந்த வெற்றி அந்த அணிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.  

இதற்கு முன்பு கடந்த 2000 ஆம் ஆண்டில் இந்தியாவை வீழ்த்து சாம்பியன்ஸ்  கிண்ணத்தை கைப்பற்றியதே சர்வதேச அரங்கில் நியூசிலாந்து அணியின் சிறப்பான பட்டமாக பார்க்கப்பட்டது.

தற்சமயம் அந்த விதியானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியின் இந்த வரலாற்று வெற்றிக்கு விராட் கோலி வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இந்த போட்டியே நியூசிலாந்து விக்கெட் காப்பாளர் பி.ஜே.வாட்லிங்கின் வாழ்க்கையின் இறுதி டெஸ்ட் ஆகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்திற்கான ஓட்டப்பந்தயத்தில் அணிக்கான அவரது பங்களிப்பும்  அளப்பரியது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09