பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி பெனிக்னோ அக்வினோ, நீண்டகால உடல் நலப் பிரச்சினைக்கு பின்னர் வியாழக்கிழமை காலமானதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

61 வயதான அக்வினோ, 2010 - 2016 வரை நாட்டின் 15 ஆவது ஜனாதிபதியாக பணியாற்றியதுடன், மேலும் பல பதவிகளில் இருந்துள்ளார்.

தலைநகர் மணிலாவிற்கு அருகிலுள்ள கேபிடல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக மையத்தில் பிலிப்பைன்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது, 

இது தொடர்பில் தகவல் அளிக்காத அவரது குடும்பத்தினர் விரைவில் ஒரு அறிக்கையை வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் அவரது மரணத்தை 2012 இல் அக்வினோவால் நியமிக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதி மார்விக் லியோனன் உறுதிபடுத்தியுள்ளார்.