நாட்டில் நேற்று 22.06.2021 கொரோனா தொற்று காரணமாக மேலும் 65 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 30 வயதுக்கு கீழ்பட்டவர்களில், ஆண் ஒருவரும், பெண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில், 04 பெண்கள், 06 ஆண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில்,  25 பெண்களும், 40 ஆண்களுமாக 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2769 ஆக உயர்வடைந்துள்ளது. 

இதேவேளை, இன்றையதினம் 2178 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நாட்டில் இதுவரை 246,091 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.