சவூதி அரேபியாவில் யோகாசனத்தை ஊக்குவிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்திட்டுள்ளது. சவூதி விளையாட்டு அமைச்சின் தலைவர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்த இந்தியாவின் மொராரதேசிய யோகா நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

யோகாசன தரங்கள் மற்றும் பயிற்சிகளை நிறுவுவதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழி வகுக்கிறது. அது மாத்திரமன்றி யோகாசன துறையில் ஆராய்ச்சி, கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றில் ஒத்துழைப்புக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவுவதாக சவுதிக்கான இந்திய தூதுவர் ஆசாஃப் சயித் தெரிவித்துள்ளார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய தூதுவர் ஆசாஃப் சயீத் மற்றும் சவூதி விளையாட்டு அமைச்சின் தலைவர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் அப்துல்லா பைசல் ஹம்மட் ஆகியோர் கையெழுத்திட்டனர். யோகா பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று ரியாத்தில் நடைபெற்ற இந்த கையெழுத்திடும்  நிகழ்வு சர்வதேச யோகாசன தினத்தில் இடம்பெற்றமை முக்கியமானதாகும்.