(இராஜதுரை ஹஷான்)
மின்சாரத்துறைசார் சேவையில் காணப்படும் முறைப்பாடுகள் குறித்து விசாரித்து தீர்வு காணும் வகையில் மின்சாரத்துறையின் ஒழுங்குப்படுத்தல் நிறுவனமான இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தொலைப்பேசி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு மின்சார பாவனையாளர்கள் தமது முறைப்பாடுகளை 077 5687387 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக அறிவிக்கமுடியுமென பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக மின்சாரத்துறை பாவனையாளர்கள் தங்களின் பிரச்சினைகளை ஆணைக்குழுவிற்கு முறைப்பாடளிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதனை கருத்திற் கொண்டே விசேட தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் சிறந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கு பாவனையாளர்கள் தங்களின் பெயர், முகவரி, தொலைப்பேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல், முகவரி (இருப்பின்)தொடர்புடைய இணைப்பு(இருப்பின்) ஆகியவற்றை குறிப்பிடுவது அவசியமாகும். முறைபாடு கிடைக்கப் பெற்றதன் பின்னர் பாவனையாளருக்கு குறிப்பு இலக்கம் அனுப்பி வைக்கப்படும்.
விசாரணைகள் தொடர்பில் கேட்டறியவும், முறைப்பாடுகளை தாக்கல் செய்யும் போது ஏதேனும் சிக்கல் நிலை ஏற்பட்டால், பாவனையாளர்கள் மேற்படி இலக்கத்தின் ஊடாக அதிகாரியை தொடர்புக் கொள்ளலாம். அதற்கமைய அதிகாரிகளை நேரில் சந்திப்பதை தவிர்த்து ஒன்லைன் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்புக் கொள்ளுமாறு பொது மக்களுக்கும், ஏனைய பங்குதாரர்களுக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட இலக்கத்தில் வாட்ஸ்அப், வைபர் மற்றும் இமோ ஆகிய வசதிகள் காணப்படுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM