(நா.தனுஜா)
ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித்தலைவர் பதவியிலிருப்பதன் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. மாறாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர் ஜனாதிபதியாக வேண்டும். நாம் அதற்குரிய நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றோம் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
எம்மிடம் ரணசிங்க பிரேமதாஸவின் ஜனன தினத்தை நினைவுகூரவில்லையா என்று கேள்வி எழுப்புகின்றார்கள். கடந்த காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஒரு பிரிவினர் ரணசிங்க பிரேமதாஸவிற்கு எதிராகக் குற்றப்பிரேரணையைக் கொண்டுவந்தபோது ரணில் விக்கிரமசிங்கவின் மூலமாகவே அந்தப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டு, ரணசிங்க பிரேமதாஸ காப்பாற்றப்பட்டார்.
அந்தவகையில் இன்று பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும்போது ரணசிங்க பிரேமதாஸவை நினைவுகூர்வார். அவரின் ஜனன தினத்தை வரலாற்றுச்சிறப்புமிக்க வகையில் நினைவுகூர்வதற்கான நடவடிக்கைகளையே ஐக்கிய தேசியக்கட்சி மேற்கொண்டுள்ளது.
அடுத்ததாக கட்சியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. கட்சிக்கு அப்பால்சென்ற உறுப்பினர்கள் இருக்கமுடியாது.
அந்தவகையில் கட்சியின் யாப்பிற்கு எதிராக செயற்பட்டவர்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் யாப்பைமீறி செயற்படக்கூடியவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். முறையற்ற விதத்தில் செயற்பட்ட உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், அவர்களது தவறை உணர்ந்து திருத்திக்கொண்டு மீண்டும் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கான காலஅவகாசத்தை வழங்கியிருந்தோம்.
அதற்கேற்ப கட்சியுடன் மீண்டும் இணைந்து செயற்பட விரும்புபவர்களை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, தொடர்ந்தும் கட்சியின் கொள்கைகளுக்கு முரணாக செயற்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கம்பளை மாநகரசபை உறுப்பினர்கள் எமது கட்சியுடன் இணைந்துகொண்டதைப்போன்று, மேலும் சில மாநகரசபை உறுப்பினர்கள் எம்முடன் இணைவதற்குத் தயார்நிலையில் இருக்கின்றார்கள்.
அடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியை வலுவிழக்கச்செய்வதே எமது நோக்கம் என்று சிலர் கூறுகின்றார்கள். ஆனால் அக்கட்சியை வலுவிழக்கச்செய்வதற்கான செயற்பாடுகளை நாம் முன்னெடுக்கத்தேவையில்லை. மாறாக அவர்களுடைய நடவடிக்கைகள் அனைத்தும் அதற்கேற்றவாறுதான் அமைந்துள்ளன.
ஐக்கிய தேசியக்கட்சியைப் பிளவடையச்செய்து புதிதாக உருவாக்கப்பட்ட எந்தவொரு கட்சிகளும் சிறப்பாக செயற்பட்டதில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய அனைத்துக்கட்சிகளும் அந்தப் பட்டியலிலேயே அடங்குகின்றன.
ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித்தலைவர் பதவியிலிருப்பதன் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. மாறாக நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர் ஜனாதிபதியாக வேண்டும். நாம் அதற்குரிய நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றோம். அவர் ஜனாதிபதியாகாவிட்டால், நாட்டுமக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்படும். நடப்பது சாத்தியமில்லை என்று நினைக்கும் விடயங்கள் இப்போது சாத்தியமாகிக்கொண்டு வருகின்றன என்று குறிப்பிட்டார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM