கொவிட் தொற்றுக்குள்ளானோரில் பலர் வீடுகளிலேயே உயிரிழக்கக் காரணம் இது தான் !

Published By: J.G.Stephan

23 Jun, 2021 | 02:04 PM
image

(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றுக்குள்ளானோரில் பெருமளவானோர் வீடுகளிலேயே உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளமைக்கான  காரணம் , அறிகுறிகள் குறைவடைந்த பின்னர் வைத்தியசாலைகளுக்கு செல்லாமல் வீடுகளிலேயே தங்கியிருப்பதாகும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் உயிரிழக்கும் வீதம் அதிகரித்துள்ளமைக்கான காரணம், தொற்று அறிகுறிகள் குறைவடைந்த பின்னர் சுகாதார தரப்பினருக்கு அறிவிக்காமல் வீடுகளிலேயே இருப்பதாகும்.

இதே போன்று தொற்று அறிகுறிகள் தீவிரமடைந்தால் அதன் போது தொற்றாளரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் இன்மையும் வீடுகளில் உயிரிழப்புக்கள் பதிவாகும் வீதம் அதிகரிக்க காரணமாகும்.

கொவிட் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு  அவர்களிடம் சொந்த வாகனம் இல்லாத பட்சத்தில் வேறு வாகனங்களில் செல்வதிலும் சிக்கல் காணப்படுகிறது. அத்தோடு 1990 அம்புலன்ஸ் சேவைகளும் தொடர் சேவையில் ஈடுபட்டுள்ளமையில்  இதில் தாக்கம் செலுத்துகின்றது. எனவே சாதாரண தொற்று அறிகுறிகள் தென்படும் போதே மக்கள் வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27