மாற்றமடைந்து வரும் இன்றைய தொழ்நுட்ப உலகில் சமூக பிரச்சினைகள், தீவிரவாதம் மற்றும் பாலியல் பிரச்சினைகள் ஏற்படக் காரணமாக அமைவது கல்வி அறிவும் மற்றும் வேலையற்றோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமையே என ஆய்வுகள் காட்டுகின்றன.

அண்மைகால ஆய்வின் படி மட்டகளப்பு மாவட்டத்தில் மட்டும் 11 வீதமானோர் தொழில் வாய்ப்பில்லாமல் இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் கிழக்கு மாகாணத்திலுள்ள இளம் சமுதாயத்தினருக்கு வேலை வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க பாம் நிறுவனம் தீர்மானித்தது. இதன் முதல் கட்டமாக மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரையும், உதவித் திட்டமிடல் பணிப்பாளரையும், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் உதவி அரசாங்க அதிபர் ஆகியோரை சந்தித்து இத்திட்டம் தொடர்பிலான தெளிவுப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டதுடன் அது சம்பந்தமாக ஆக்கபூர்வமான ஆலோசனைகளும் பெறப்பட்டது. 

இதன்போது, பாம் நிறுவனமும் ஜயலத் தொழில்நுட்ப தொழிற்பயிற்சி நிறுவனமும் இணைந்து மட்டக்களப்பிலுள்ள இளைஞர்களுக்கு கனரக வாகன தொழிற்பயிற்சி பாடத் திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளதாகவும் அதன் ஊடாக இளம் சமுதாயத்தின் எண்ணங்களை மேம்படுத்தவும் சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்கவும் முடியுமெனவும் நம்பிக்கை வெளியிட்டது.

மட்டக்களப்பில் தொழில்வாய்ப்புக்களைத் தேடிக் கொண்டிருக்கும் மற்றும் தொழில்வாய்ப்புக்களை தேடுவதற்கு தங்களுக்கு தகுதியில்லை என ஓரமாகி இருக்கும் இளைஞர்களுக்காகவே இந்த செயற்திட்டத்தை பாம் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

ஜயலத் தொழில்நுட்ப தொழிற்பயிற்சி கல்லூரியின் ஊடாக கல்வித் தகைமை இல்லாமலேயே தொழிற்பயிற்சியை பெற்று சிறந்த சான்றிதழ்களோடு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த தொழில் வாய்ப்பொன்றை பெற்றுக் கொள்ள முடிவதோடு, மாதம் ஒன்றுக்கு உள்நாட்டில் 50,000 ரூபா சம்பளமாகவும் வெளிநாட்டில் 1,50,000 ரூபா வரையிலான சம்பளத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த பயிற்சிக் கல்லூரியில் பாடநெறியொன்றை மேற்கொள்வதற்கு கல்விப் பொது தராதர சாதாரண தரத்திலோ அல்லது உயர் தரத்திலோ சித்தியடைந்திருக்க வேண்டுமென்ற தேவையில்லை. அதற்குப் பதிலாக உங்களது கடின உழைப்பும் முயற்சியும் மாத்திரம் இருந்தால் போதும்.

ஜயலத் தொழிற் பயிற்சி நிறுவனத்தின் ஊடாக மாதம் ஒன்றுக்கு 2000 தொழில் வாய்ப்புக்கள் உள்ளன. இந்த 2000ம் பேரில் நீங்களும் ஒருவராக விரும்பினால் பாம் நிறுவனமும் ஜயலத் தொழிற்பயிற்சி நிறுவனமும் இணைந்து மேற்கொள்ளும் இந்த தொழிற்பயிற்சி செயற்திட்டத்தில் இன்றே இணையுங்கள்.

இதுதொடர்பில் கருத்து தெரிவித்த ஜயலத் கனரக தொழிற் பயிற்சிக் கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில், எமது கல்வி நிறுவனத்தின் சேவையை நாடு முழுவதிலும் விஸ்தரிக்க நாம் எண்ணியுள்ளோம். குறிப்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், முஸ்லிம் மாணவர்களின் கல்வித் தரத்தையும் அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த நாம் பாம் நிறுவனத்துடன் கைகோர்த்து இந்த செயற்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதன் ஊடாக முயற்சியுள்ள அனைவருக்கும் எமது நிறுவனத்தின் ஊடாக பயிற்சியைப் பெற்று சிறந்த உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ தொழில்வாய்ப்பைப் பெறுவதோடு நல்ல சம்பளத்தையும் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். 

மக்களின் வாழ்க்கைத் தரம் இன்னும் கீழ் நோக்கிச் செல்கிறது என்றால் கிழக்கில் தற்போது நிலவும் வறுமையும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டுமாயின் சிறந்த தொழில் ஒன்று அவசியம். உங்கள் வீட்டின் தரம் உயரவேண்டுமாயின் ஒரு சிறந்த தொழில் மிக முக்கியம். இதற்கு பாம் நிறுவனம் வழிகாட்டுகிறது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பாம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுனில் தொம்பேபொல, நெதர்லாந்தை தலைமையகமாகக் கொண்டு இலங்கையின் நுவரேலியாவில் 1987ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட எமது நிறுவனம் பெருந்தோட்டங்களில் எமது சேவையை முன்னெடுத்து வருகின்றது. 2004ம் ஆண்டு காலப் பகுதியில் எமது சேவை வடக்கு கிழக்கில் விஸ்தரிக்கப்பட்டது. அங்கு குடிநீர் விநியோகம், சுகாதாரம், ஆண் பெண் சமத்துவம், சமூக மட்டத்திலான நல்லாட்சியை ஏற்படுத்துதல், சூழல் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம், சிறுவர் இளைஞர் அபிவித்தி, முதியோருக்கான நலன்புரி உள்ளிட்ட பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். 5 வருடகால திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றேன். 2020ஆம் ஆண்டை இலக்காகக் கொண்ட செயற்திட்டத்தில் இளைஞர் மேம்பாட்டு செயற்பாட்டுத் திட்டங்களே முன்னிலை வகிக்கின்றன. அந்த நோக்கத்தை அடைய ஜயலத் கனரக தொழிற்பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளும் இந்த செயற்திட்டமாகும். இதனூடாக மட்டக்களப்பிலுள்ள இளம் சமுதாயத்தின் வாழ்க்கை தரத்தையும், அவர்களது எண்ணங்கள் சிந்தனைகளை மாற்ற முடியும். எனத் தெரிவித்தார்.

தயக்கம் என்ற எண்ணம் மனிதனது வாழ்க்கையும் அவனது தன்னம்பிக்கையையும் தளத்திவிடும். எண்ணம் சுருங்கும் போது உங்கள் வாழக்கைத் தரமும் பாதிக்கும். அப்படி பாதித்தால் எதிர்காலம் கேள்விக் குறியாகும். மனது ஒரு பரசூட் போன்றது அது விரிந்தால் தான் அதில் பயன்பாடு உள்ளது. 

வேலை வாய்ப்புக்களை தேடிச் செல்வோர் எவ்வித பயிற்சியும் இல்லாததால் அங்கு அடிமைகளாகவே தொழில்புரிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாடு செல்வதற்கு முன்பு தொழிற்பயிற்சியை மேற்கொண்டால் சிறந்த தொழிலையும், அதற்கான உரியசம்பளத்தையும் பெற முடியும்.