கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 78 ஆயிரம் பைசர் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கிடைக்கப்பெறும் தடுப்பூசிகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் மூன்று வாரத்திற்குள் இலங்கையை வந்தடையவுள்ளது.

இதுவே இலங்கைக்கு கிடைக்கப்பெறும் பைசர் தடுப்பூசிகளின் முதல் தொகுதியாகும். அவசரகால பயன்பாட்டிற்காக பைசர் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்த முதல் தெற்காசிய நாடு இலங்கை ஆகும்.

இராஜாங்க அமைச்சர்  வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே 5 மில்லியன்  பைசர் தடுப்பூசியை அரசாங்கம் கொள்வனவு செய்யுமென ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.