இலங்கை தமிழ் அகதி ஒருவர் தனது இரண்டாவது மனைவியை தமிழகத்தின் காந்திமா நகரில் திங்கள்கிழமை இரவு கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவரை கைதுசெய்ய பொலிஸார் நான்கு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளனர். இலங்கைக்கு கடல்வழியாக தப்பிச் செல்வதை தடுக்க ரமேஸ்வரம் பகுதியில் சிறப்பு அணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.

49 வயதான லவேந்திரன் என்ற நபர் தனது 32 வயதான மனைவி கவிதாவை திங்கட்கிழமை இரவு 10 மணியளவில், காந்திமா நகரில் உள்ள அவர்களது வாடகை வீட்டில் வைத்து கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக சரவணம்பட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கவிதா, தனது முதல் கணவரிடமிருந்து பிரிந்த பின்னர் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு லாவேந்திரனை மணந்து கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை) இன் கீழ் பொலிஸார் சந்தேக நபருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.