இத்தாலியில் அடுத்த வாரம் நடைபெறும் ஜி 20 கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோனி பிளிங்கன் மற்றும் சீன வெளியுவறு அமைச்சர் வாங் யி ஆகியோரின் சந்திப்பு குறித்து இரு நாடுகளும் விவாதித்து வருவதாக தகவல்கள் வெளியுகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் இது தொடர்பில் பீங்கில் உள்ள சக ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும், அமெரிக்காவின் துணை செயலாளர் வெண்டி ஷெர்மன் கோடையில் சீனாவுக்கு வருகை தர விரும்புவதாகவும்  'த பைனான்சியல் டைம்ஸ்' சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் சீனாவிற்கு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜேக் சல்லிவன் அல்லது பிளிங்கனை அனுப்புவது பற்றிய ஆரம்ப உள் விவாதங்களையும் வெள்ளை மாளிகை நடத்தியுள்ளது.