ஜேர்மனியின் சான்ஸ்லர் 66 வயதான ஏஞ்சலா மேர்கெல் (Angela Merkel) இரண்டு வெவ்வேறு வகையான கொரோனா தடுப்பபூசிகளை போட்டுக்கொண்டுள்ளார்.

அந்தவகையில், முதலாம் கட்ட தடுப்பூசியாக கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி ஏஞ்சலா மேர்கெலுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசியாக அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசிபோடப்பட்டுள்ளதாக ஜேர்மனிய அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளின் கலவை ஒரு நல்ல யோசனையாக இருக்கும் என்று மருந்துவ நிபுணர்கள் நம்புகின்றனர். 

மேர்கெல் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜேர்மனியின் சான்ஸ்லர் பதவியில் இருந்து விலகவுள்ளார்.

மார்ச் மாதத்தில், ஜேர்மனி பிற ஐரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியை போடுவதை நிறுத்தியது.

ஜேர்மனி முன்னர் தடுப்பூசி பயன்பாட்டை 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடைசெய்திருந்தது, ஆனால் தற்போது அதை அனைத்து பெரியவர்களுக்கும் வழங்கத் தயாராக உள்ளது என்று ஜேர்மன் தொலைக்காட்சி சேவையொன்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சமீபத்திய வாரங்களில் ஜேர்மனியில் தடுப்பூசி போடும் திட்டம் துரிதப்படுத்தப்பட்டது.

நாட்டின் சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் தற்போது முதலாம் கட்ட கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மேர்க்கெலுக்கு அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவு  செய்து, தடுப்பூசி பெற்றதாக அறிவித்தார்.

இந்நிலையில் அவர் 2 ஆம் கட்டமாக மொடர்னா தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளார்.