இலங்கையின் முன்னாள் பிரதமரில் ஒருவரான ரணில் விக்ரமசிங்க ஒன்பதாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக இன்று சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (23) உறுதியுரை எடுத்தார். 

அதனை அடுத்து அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க முன்னிலையில் உறுப்பினர்களின் பதிவேட்டில் கையொப்பமிட்டார். 

1977 இல் ஐக்கிய தேசிய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் தெரிவான விக்ரமசிங்க 08 ஆவது பாராளுமன்றம் வரை தொடர்ந்து 42 வருடங்கள் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகளவு தடவை பிரதமராக பதவி வகித்துள்ளதுடன், அமைச்சரவை அமைச்சுப் பதவி, சபை முதல்வர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட பல பதவிகளை வகித்துள்ளார். 

73 வயதான ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக 09 ஆவது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.