மாகாண சபைகளின் கீழுள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு நிதி ஒதுக்காது: சுகாதார அமைச்சர்

Published By: J.G.Stephan

23 Jun, 2021 | 10:07 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
மாகாணசபையின் கீழுள்ள வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் வழங்க விரும்பாதுபோனால் வைத்தியசாலைகளை எமது பொறுப்பில் எடுக்க மாட்டோம். அதேவேளை மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு நிதி ஒதுக்காது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவின் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி  சார்ள்ஸ் நிர்மலநாதன் வடக்கில் மாகாணசபையின் கீழுள்ள  கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் எடுப்பதனை ஏற்க முடியாது. அரசிலுள்ள வடக்கு மாகாண பிரதிநிதிகள் கூட இதனை ஏற்க மாட்டார்கள் என்றே நான் கருதுகின்றேன் என்ற விடயத்தில் வலியுறுத்தினார்.

 இதற்கு பதிலளித்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி,  வடக்கில் மாகாணசபையின் கீழுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் வைத்தியசாலைகளை மத்திய அரசின் கீழ் எடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. 

வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யவே அவ்வாறு மத்திய அரசின் கீழ் எடுக்கப்படுவதாக காரணம் கூறப்படுகின்றது. ஆனால் உண்மையான நோக்கம் அதுவாக இருக்க முடியாது. இந்த வைத்தியசாலைகளை இதுவரை மாகாணசபைதான் அபிவிருத்தி செய்து வந்தது.  மாவட்டங்கள் விரும்பாது விட்டால் வைத்தியசாலைகளை எமது பொறுப்பில் எடுக்க மாட்டோம். அவர்களே அதனை வைத்திருக்க முடியும். அதேவேளை மாகாண சபைகளின் கீழ் உள்ள வைத்தியசாலைகளுக்கு சுகாதார அமைச்சு மூலம் நிதி ஒதுக்கபட மாட்டாது என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்தார் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13