நுகர்வோரை ஏமாற்றியுள்ள சமையல் எரிவாயு நிறுவனத்துக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? - அனுரகுமார திஸாநாயக்க கேள்வி

By T. Saranya

23 Jun, 2021 | 09:17 AM
image

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் பாதுகாப்பு  அதிகார சபை அனுமதிக்காத நிலையில் மோசடியான வகையில் விலை அதிகரிப்பை மேற்கொண்டு லிட்ராே காஸ் நிறுவனம் நுகர்வோரை ஏமாற்றியுள்ளது என்று ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதிய சமையல் எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்துவதாக கூறி, லிட்ராே காஸ் நிறுவனம் 12.5 கிலோவாக இருந்த சிலிண்டரின் நிறையை 9.8 கிலோவாக குறைத்து சிலிண்டரின் விலையை 100 ரூபாவினால் குறைத்திருக்கின்றது. ஆனால் இருந்த விலையை விடவும் புதிய சிலிண்டரில் கிலோ ஒன்றின் விலை 32  ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதன்மூலம் நுகர்வோர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

நுகர்வோர் அதிகார சபை எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு இடமளிக்காத போதும், மோசடியான வகையில் விலையை அதிகரிக்க நடவடிக்கையெடுத்துள்ளது. நுகர்வோர் அதிகார சபை இந்த விடயம் தொடர்பில் வழக்குப் போட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த காஸ் நிறுவனம் அமைச்சின் கீழ் உள்ள விடயமாக இருக்கும் போது ஏன் நீதிமன்றத்திற்கு போக வேண்டும். அரசாங்கத்துக்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? ஊழலை மறைப்பதற்காகவே வழக்கு விடயத்தை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

சந்தையில் 12.5 சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இதனால் புதிய சிலிண்டரை கொள்வனவு செய்யும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருந்தனர். இந்நிலையில் புதிய எரிவாயு சிலிண்டருக்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியதா? புதிய வகை எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கையெடுக்கப்படுவதாக முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் உண்மையானவையா? அது உண்மையென்றால் இப்போது இருக்கும் எரிவாயு செயல்தன்மை குறைந்ததா? பாதுகாப்பற்றதா? சர்வதேச தரத்தில் இல்லையா? என்பதனை கூற வேண்டும்.

நாடு பூராகவும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன என்பதை தெரிவிக்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோதுமை மாவின் விலை எதிர்வரும் வாரங்களில்...

2022-10-03 16:51:03
news-image

டீசலின் விலையை குறைக்க முடியாது -...

2022-10-03 16:15:16
news-image

வைத்தியர்கள் 60 வயதில் ஓய்வு பெற்றால்...

2022-10-03 16:12:06
news-image

ரயில்வே திணைக்கள சொத்துக்களை கொள்ளையிட்ட மூவர்...

2022-10-03 17:03:50
news-image

மட்டு. கொக்கட்டிச்சோலையில் யானை தாக்கி விவசாயி...

2022-10-03 17:08:23
news-image

மண்சரிவு, வெள்ள அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க...

2022-10-03 16:56:26
news-image

கிழக்கு மாகாணத்தை ஆளுநர் நாசப்படுத்தியுள்ளார் -...

2022-10-03 16:23:08
news-image

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு :...

2022-10-03 16:49:44
news-image

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைகிறது...

2022-10-03 16:07:56
news-image

சாய்ந்தமருது கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டவர் ஆசிரியை...

2022-10-03 16:25:17
news-image

கனேடிய உயர்ஸ்தானிகரும் பிரான்ஸ் தூதுவரும் ஜனாதிபதியை...

2022-10-03 16:02:37
news-image

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளின்...

2022-10-03 15:27:04