வவுனியா சிதம்பரபுரம் , நெளுக்குளம் பகுதிகளில் அமைந்துள்ள பொலிஸ் காவலரண்கள் . இரண்டும் பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . 

பொதுமக்கள் முறைப்பாடுகள் வழங்கும் செயல்முறையை இலகுவாக்குவதற்காக நாடு முழுவதும் 197 புதிய பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர் தெரிவித்திருந்தார் . 

இந்த முயற்சிக்கு அமைவாக வவுனியாவில் சிதம்பரபுரம் மற்றும் நெளுக்குளம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் காவலரண்களே இவ்வாறு புதிய பொலிஸ் நிலையங்களாக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . 

வவுனியா தலைமை பொலிஸ் நிலையங்களில் இணைப்பு செய்யப்பட்டிருந்த குறித்த இரு பொலிஸ் காவலரண்களும் தனியான பொலிஸ் நிலையங்களான உட்கட்டமைப்புக்களை உள்ளடக்கிய புதிய பொலிஸ் நிலையங்களாக அமைக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் மிக விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.