புதுக்குடியிருப்பில் காடழிப்பு - 8 பேர் கைது

Published By: Digital Desk 4

22 Jun, 2021 | 08:20 PM
image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் திம்பிலி பகுதியில் அரசகாடுகள் அழிக்கப்பட்டு அபகரிக்கப்பட்டமை தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தினை சேர்ந்த 8 பேர் பொலிசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் திம்பிலி குளத்திற்கு சொந்தமான பகுதி மற்றும் அதனை அண்டிய காட்டுப்பகுதிகள் கனரக இயந்திரம் கொண்டு அழிக்கப்பட்டு அரச காணிகள் அபகரிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் கோம்பாவில் கிராம சேவையாளரினால் அடையாளப்படுத்தப்பட்ட நபர்களின் பெயர்களுடன் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை திம்பிலி குளத்தின் கமக்கார அமைப்பினர் மற்றும் புதுக்குடியிருப்பு கமநலசேவைகள் திணைக்களத்தினரும் தமது பதிவில் உள்ள குளத்தின் காணி அபகரிக்கப்பட்டுள்ளதுடன் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்வாறு காணி அபகரிப்பினை மேற்கொண்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டவர்கள் புதுக்குடியிருப்பு பொலிசாரால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இன்று(22.06.21) விசாரணை செய்யப்பட்டு கைதுசெய்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33