இந்திய - இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடல்..!

Published By: J.G.Stephan

22 Jun, 2021 | 06:03 PM
image

(நா.தனுஜா)
இந்திய - இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற இருதரப்புக் கலந்துரையாடலின்போது, பிம்ஸ்டெக் நாடுகளின் கூட்டிணைவு (வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பு), இந்தியப் பெருங்கடல் ஒத்துழைப்பு அமைப்பு (அயோரா) உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இந்த இருதரப்புக் கலந்துரையாடல் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கிறார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான கலந்துரையாடல் சிறப்பானதாக அமைந்தது. இதன்போது இருதரப்பு நிகழ்ச்சிநிரல் மற்றும் திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. அத்தோடு பிம்ஸ்டெக், இந்தியப்பெருங்கடல் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளடங்கலாக பிராந்திய ரீதியில் காணப்படும் பல்வேறு கட்டமைப்புக்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இருநாடுகளுக்கு இடையில் இனிவரும் காலங்களிலும் நெருங்கிய தொடர்பு பேணப்படும் என்று ஜெய்ஷங்கர் அவரது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சீனாவின் ஆதரவுடனான கொழும்புத்துறைமுக நகரத்திட்டம் தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், பிம்ஸ்டெக் அமைப்பின் ஊடாகப் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான அழுத்தத்தை இலங்கை வழங்குவதற்கு இந்தியா முயற்சிக்கின்றது என்று இந்திய ஆங்கில ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

பிம்ஸ்டெக் என்று அழைக்கப்படும் வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப, பொருளாதார கூட்டுறவிற்கான முன்னெடுப்பில் இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், மியன்மார், தாய்லாந்து, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

அதேபோன்று இந்தியப் பெருங்கடல் ஒத்துழைப்பு அமைப்பானது இந்துசமுத்திரப்பிராந்திய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தியை உறுதிசெய்தல் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக 23 நாடுகளின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56