(எம்.மனோசித்ரா)

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நாளை புதன்கிழமை காலை 10 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை நிகழ்த்தவுள்ளார்.

நாளாந்தம் தீவிரமாக அதிகரித்து வரும் கொவிட் தொற்றினை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் தோல்வி என்பவை குறித்து இதன் போது கருத்து தெரிவிக்கவுள்ளார்.

இது தவிர எரிபொருள் விலை அதிகரிப்பினால் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் தொடர்பிலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனது விசேட உரையில் தெரிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.