இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன் துப்பாக்கிச் சூடு; பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு விளக்கமறியல்

By T. Saranya

22 Jun, 2021 | 04:21 PM
image

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோத்தர் ஜூலை மாதம் 6  ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்னால் நேற்று திங்கட்கிழமை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. சம்பவத்தில் 34 வயதான நபரொருவர் உயிரிழந்தார்.

குறித்த துப்பாக்கி சூடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right