அதிகரித்து வரும் மாசு நிறைந்த நீர் மற்றும் குப்பைகளை கடற்கரைகளில் சேருவதால் பாக்கிஸ்தான் கடல் ஆமைகளுக்கான பாரம்பரிய வாழிடங்களை விரைவாக இழந்து வருகிறது, ஏற்கனவே ஆபத்தில் உள்ள உயிரினங்களுக்கு இது மேலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த பத்தாண்டுகளில் பசுமை ஆமைகளுக்கான வாழிடத்தில் 25-30 சதவீதத்தை பாகிஸ்தான் இழந்துள்ளது என்று மூத்த வனவிலங்கு அதிகாரி அட்னன் ஹமீத்தை சுட்டிக்காட்டி டான் அனடோலு செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.

உலகளவில் பாகிஸ்தானில் உள்ள இரண்டு கடற்கரைகளிலும் பச்சை நிற ஆமைகளுக்கான 11 மிகப்பெரிய வாழிடங்கள் (கூடுகட்டும் தளங்கள்) காணப்பட்டன.

இருப்பினும், அவை அழிக்கப்பட்டுவிட்டன. முக்கியமாக சமீபத்திய ஆண்டுகளில் கட்டுப்பாடற்ற கட்டுமானத்தின் காரணமாக இந்த நிலைமைகள் அதிகரித்துள்ளன என்று ஹமீத் தெரிவித்துள்ளதாக செய்தி முகவரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அதிகப்படியான நீர் மாசுபாடு மற்றும் குப்பை, இயற்கை வாழ்விடங்கள் குறைதல் மற்றும் கவனக்குறைவான மீன்பிடி முறைகளை பயன்படுத்தி மீன் பிடித்தல் ஆகியவை சமீபத்திய தசாப்தங்களில் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், தற்போது எஞ்சியிருக்கும் திண்மக்கழிவுகளில் பெரும்பாலானவை பிளாஸ்டிக் பைகள் மற்றும் டயப்பர்களை உள்ளடக்கியது, அவை ஊர்வனவற்றிற்கான "கொலையாளிகள்" ஆகும். 

அவற்றை உட்கொண்டால், ஊரும் விலங்கினங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகின்றது. இறுதியில் அவ்வுயிரினங்கள் உயிரிழக்கின்றன என்று வனவிலங்கு அதிகாரி கூறினார். பாகிஸ்தானின் கடல் தளங்கள் ஏன் இன்னும் கடல் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படவில்லை என்று அந்த அதிகாரி மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பலூசிஸ்தானில் உள்ள கடற்கரைகளிலும் பச்சை ஆமைகள் காணப்படுகின்றன. பழமைவாத மதிப்பீடுகளின் அடிப்படையில், கடந்த பத்து ஆண்டுகளில் கடல் ஆமைகளின் எண்ணிக்கை 20 முதல் 30 சதவீதம் குறைந்துள்ளது என்று கூறலாமென ஹமீத் குறிப்பிடுகின்றார்.

இருப்பினும், இயற்கை நிதியத்தின் கராச்சி அலுவலகத்தில் தொழில்நுட்ப ஆலோசகராகவுள்ள (கடல் மீன்பிடி) மொஹமட் மொய்சாம் கான் ஊர்வனவற்றின் தொகை அதிகரித்து வருவதாக நம்புகிறார்.

"ஆபத்தான சூழலிலும் பச்சை ஆமைகளின் தொகை உண்மையில் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு காட்டுகிறது" என்று கான் தெரிவித்தார். பச்சை ஆமை தொகை சரிவு என்ற பொதுவான கருத்தை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எங்கள் மதிப்பீடுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் பச்சை ஆமைகளின் தொகையில் 5 சதவீதம் அதிகரிப்பு உள்ளது" என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், பாக்கிஸ்தானில் பெரும்பாலான மீன்பிடி ட்ரோலர்களில் "ஆமைகளை பாதுகாக்கும் சாதனம்" இல்லை என்று ஹமீத் கூறினார், இது கடல் ஆமைகள் வீழ்ச்சியடைய மற்றொரு காரணம். ஆனால் கான், மீன்பிடி வலைகளில் சில 'சிறிய' மாற்றங்கள், மீனவர்கள் பயிற்சியுடன் சேர்ந்து, பச்சை ஆமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியதாக வாதிட்டார்.

பச்சை ஆமைகளைத் தவிர, பாகிஸ்தானின் கடல் நீரில் ஆலிவ் ரிட்லி ஆமை, லெதர்பேக் ஆமை, லொகர்ஹெட் ஆமை மற்றும் ஹாக்ஸ்பில் ஆமை ஆகிய வகைகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.