கடற்றொழிலாளர்கள் உட்பட பிரிவினருக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கவேண்டும்: வாசு

Published By: J.G.Stephan

22 Jun, 2021 | 11:31 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)
கடற்றொழிலாளர்கள் உட்பட குறிப்பிட்ட பிரிவினருக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கப்படவேண்டும் என தெரிவித்து பாராளுமன்றத்தில் ஆளும்தரப்பை பிரதி நிதித்துவப்படுத்தும் சிறிய கட்சிகள் இணைந்து அரசாங்கத்துக்கு பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க இருக்கின்றோம் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நீர்வழங்கல் அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எரிபொருள் விலை அதிகரித்திருப்பதை எமது கட்சியான ஜனநாயக இடதுசாரி முன்னணி முற்றாக எதிர்க்கின்றது. அவ்வாறு எரிபொருள் அதிகரிக்கவேண்டி இருந்தால், அதனை எவ்வாறு செய்வதென்ற ஆலோசனை மற்றும் பிரேரணை ஒன்று எங்களிடமும் இருக்கின்றது. நாட்டில் இருக்கும் அனைத்து தரப்பிரனருக்கும் ஒரே மாதிரியான விலை அதிகரிப்பு பொருத்தம் இல்லை.

அத்துடன் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 8 கட்சிகள் ஒன்றிணைந்து இதுதொடர்பில் நீண்ட கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தோம். இதன்போது கடற்றொழிலாளர்கள், அத்தியாவசிய பொருட்களை எடுத்துச்செல்லும் வாகனங்கள், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கும் வகையிலே எரிபொருள் விலை அதிகரிக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்தோம். 

அதன் பிரகாரம் ஆளுங்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறிய கட்சிகள் என்றவகையில், எரிபொருள் விலை அதிகரிப்பின் மூலம் குறித்த பிரிவினருக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும் என எதிர்பார்க்கின்றோம். அதுதொடர்பான பிரேரணை ஒன்றை தயாரித்திருக்கின்றோம்.

 ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பிரதானரசாங்கத்துக்கு எமது பிரேரணையை சமர்ப்பிக்க இருக்கின்றோம். அதிசொகுசு வாகனங்களுக்கும் மோட்டார் சைக்கிள்களுக்கும் ஒரே மாதிரி எரிபொருள் விலை அதிகரிப்பது பொருத்தம் இல்லை என்பதையே இதன் மூலம் தெரிவிக்க இருக்கின்றோம். மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி போன்ற வாகனங்களுக்கு நிவாணம் வழங்குவதுடன் சொகுசு வாகனங்களுக்கு விசேட எரிபொருள் வரி ஒன்றை விதிப்பது பிரச்சினை இல்லை.

எரிபொருள் விலை அதிகரிப்பின் சுமை, நாட்டு மக்களுக்கு சுமக்கக்கூடிய வகையில் அது பிரிந்து செல்வதாக இருந்தால், எரிபொருள் விலை அதிகரிப்புக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை. அவ்வாறு பிரிந்து செல்லும் வகையில் எரிபொருள் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படாததாலே நாங்கள் எதிர்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32