பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 65' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியிருக்கிறது.

'கோலமாவு கோகிலா', 'டாக்டர்' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டது. 

'Beast' என ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

இப்படத்தில் விஜய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இப்படத்தை தயாரிக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய்யின் கையில் நவீன ரக துப்பாக்கியுடன் தோற்றமளிப்பதும், புகைப்படத்தில் கண்ணீர் புகை குண்டு இடம் பெற்றிருப்பதும், தலைப்பு ஆங்கிலத்தில் 'பீஸ்ட்' என இடம் பெற்றிருப்பதும் இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என இந்திய அளவிலான படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை தளபதியின் ரசிகர்கள், அவர்களுக்கு கிடைத்த பிறந்தநாள் பரிசாகக் கருதி இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.