நாட்டில் நேற்று 20.06.2021 கொரோனா தொற்றால் மேலும் 52 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் 30 வயதுக்கு கீழ் ஒரு பெண்ணும், 30 தொடக்கம் 59 வயதுக்குமிடையில் 03 பெண்கள், 07 ஆண்களும், 60 வயதுக்கு மேல் 18 பெண்களும், 23 ஆண்களுமாக 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,633 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.