அரசாங்கத்தின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது: போராட்டங்களை தொடரவுள்ளோம் - சஜித்

By J.G.Stephan

21 Jun, 2021 | 06:48 PM
image

(எம்.மனோசித்ரா)
கொவிட் தொற்றினால் பல துறைகளிலும் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையானது, அரசாங்கத்தின் மனிதாபிமானமற்ற சுயரூபத்தைக் காண்பிக்கிறது. அரசாங்கத்தின் தன்னிச்சையான எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டங்கள் தொடரும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்து மக்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் மக்கள் மீது இன்னுமொரு சுமையை சுமத்தியுள்ளமை மனிதாபிமான மற்றதும் வெட்கக்கேடான விடயமுமாகும். இதற்கு எதிராக எதிர்க்கட்சி என்ற வகையில் நாம் தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ள போராட்டத்தின் ஒரு அங்கமே விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லைப் பிரேரணையாகும்.

அரசாங்கத்தின் தன்னிச்சையான எரிபொருள் விலை அதிகரிப்பை நாங்கள் எதிர்ப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. உலகலாவிய ரீதியில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ள கொவிட் தொற்றுக்கு நமது நாடும் முகங்கொடுத்துள்ள இச் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் செய்ய வேண்டியது எரிபொருள் விலையை அதிகரிப்பது அல்ல மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாகும்.

இந்த எரிபொருள் விலை அதிகரிப்புடன் துரிதமாகவே நாட்டின் எல்லாத் துறைகளினதும் விலை அதிகரிப்புகள் தவிர்க்க முடியாததாகும். இதனால் பாதிப்படைவது நாட்டின் அப்பாவி மக்களாகும். விலையை நிலையாகப் பேணுவதற்கான நிதியமொன்றை தாபிப்பதாகக் கூறி 2020 ஆம் ஆண்டு உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்த நன்மையை மக்களுக்க வழங்காத அரசாங்கம் உரிய நிதியத்துக்கு நடந்தது என்ன என்பது பற்றி திட்டவட்டமான விளக்கமொன்றை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கவில்லை.

இரண்டு வருடங்களாக கல்வித்துறை சீரழிந்துள்ள நாட்டில், இணையவழி கல்வி வசதிகூட இல்லாது காணப்படுகின்ற அநாதரவான மாணவர் சமூகம் உள்ளனர்.  உரம் இல்லையென விவசாயிகள் கவலை வெளியிடுகின்றனர். கடற்றொழிலாளர்கள் தங்களது மீன்களை விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்க ஊழியர்கள் மட்டுமன்றி தனியார்துறை ஊழியர்களும் அநாதரவாக உள்ளனர்.

தொழில் வாய்ப்பில்லாத இளைஞர் சமூகம் நம்பிக்கை இழந்து காணப்படும் நாட்டில் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் செயற்படுவது இவ்வாறாயின் அதற்கு எதிராக போராடுவதற்கு எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் பின்நிற்க மாட்டோம் என உத்தரவாதமளிக்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பல மணிநேர மின்வெட்டை அமுல்படுத்தும் சாத்தியம்...

2022-09-27 10:02:47
news-image

இலங்கை இராணுவத்தின் 73 ஆவது ஆண்டு...

2022-09-27 10:26:41
news-image

இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஜப்பான் ஆதரவளிக்கும்...

2022-09-27 09:45:12
news-image

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

2022-09-27 09:29:04
news-image

யாழ். நெல்லியடியில் 60 லீற்றர் கசிப்புடன்...

2022-09-27 10:16:46
news-image

வங்கிக் கொள்ளை : பொதுஜன பெரமுனவின்...

2022-09-27 09:28:04
news-image

நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும்

2022-09-27 08:59:44
news-image

சீன கம்யுனிஸ்ட் கட்சியின் மாநாட்டின் பின்னர்...

2022-09-27 08:41:02
news-image

வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்து அமைச்சர் மனுஷ...

2022-09-26 21:29:12
news-image

மஹிந்த தலைமையில் புதிய அரசியல் கூட்டணி...

2022-09-26 18:39:29
news-image

இலங்கை அரசாங்கத்தின் போக்கை அடக்குமுறைகள் மீளுறுதிப்படுத்துகின்றன...

2022-09-26 21:10:02
news-image

'அதியுயர் பாதுகாப்பு வலய' உத்தரவு சட்டத்திற்கும்...

2022-09-26 20:54:52