மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 4,951 அதிகரிப்பு அதேவேளை டெல்டா வைரஸ்  வரக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதுடன், மாவட்டத்தில் தொற்று அதிகரிப்தற்கான முக்கிய காரணம் பயணத்தடையை பின்பற்றாமை, ஒன்று கூடல்களை தவிர்க்காமையே எனவும்,  பொதுமக்கள்  தேவையின்றி  வீட்டில் இருந்து வெளியேறவேண்டாம் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன்  கோரிக்கை  விடுத்துள்ளார். 

மேலும், மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த  60 வயதுடைய பெண் ஒருவரும், கோறளைப்பற்று மத்தி சுகாதார பிரிவில் மீராஓடை பிரதேசத்தைச் சேர்ந்த  48 வயதுடைய ஆண் ஒருவர் உட்பட இருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை  உயிரிழந்துள்ளதுடன் 89 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதேவேளை, மாவட்டத்தில் தொடர்ந்து அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் எழுமாறாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் இடம்பெற்ற அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  09 பேருக்கும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவல் 15 பேருக்கும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 16 பேருக்கும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 பேருக்கும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 பேருக்கும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 05 பேருக்கும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேருக்கும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேருக்கும், வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், பொலிஸ் உத்தியோகத்தர் 02 பேர் உட்பட்ட 89 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது