இளைஞர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் திட்டத்தினை வெளியிட்டது ஜம்மு-காஷ்மீர்

By J.G.Stephan

21 Jun, 2021 | 05:44 PM
image

“அரசாங்கம், மிஷன் யூத் மூலம், இளைய தலைமுறையினரின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக ஜம்மு-காஷ்மீர் முழுவதும் உள்ள ஒவ்வொரு பஞ்சாயத்திலும் இளைஞர் கழகங்களை நிறுவும்”

பஞ்சாயத்து மட்டத்தில் இளைஞர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் பொருட்டு, ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் லெப்டினன்ட் மனோஜ் சின்ஹா ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்காகவும், இளைய தலைமுறையினரின் கவலைகளுக்கு தீர்வு காணவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

முதல் கட்டமாக, 4,290 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 22,500 இளைஞர்களை இளைஞர் கழகங்களில் உள்ளீர்க்கப்படவுள்ளனர், இந்த முயற்சிக்கு அரசாங்க திறைசேரியிலிருந்து 12 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) செலவிடப்படவுள்ளது.

‘மிஷன் யூத்’ சம்பந்தமான திட்டத்தினை முன்மொழியும் குழு கூட்டத்திற்கு சின்ஹா தலைமை தாங்கினார், இதில் யூனியன் பிரதேசத்தில் இளைஞர்கள் வாழ்வாதார திட்டங்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளிலும் புதிய திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என்று கூப்பட்டதோடு பல திட்டங்களுக்கு ஒப்புதல்களும் வழங்கப்பட்டன.

இதற்காக, ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் இரண்டு அதிநவீன பயிற்சி மையங்களை ஆரம்பிக்கவும் சிவில் சேவை மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்பதற்கும் வாழ்வாதாரத் திட்டத்தின் இன் கீழ் அந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இந்திய அரசாங்கம், மிஷன் யூத் மூலம், பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சொந்தமாக சிகிச்சை மையங்களைத் ஆரம்பிப்பதற்கு நிதி உதவி வழங்கும். முதல் கட்டத்தில், 400 பல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் 800 துணை மருத்துவர்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட சுய வேலைவாய்ப்பு திட்டத்திற்கு தெரிவு செய்யப்படுவார்கள் என்று லெப்டினன்ட் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

இந்த திட்டத்தை திறம்பட நிறைவேற்றுவதை வலியுறுத்தி, இளைஞர்கள் சார்ந்த திட்டங்களை சிறப்பாக செயற்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சின்ஹா அறிவுறுத்தினார். சிறந்த முடிவுகளை பெறுவதற்காக முன்மொழியப்பட்ட திட்டங்களுடன் தற்போதுள்ள திட்டங்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

“இளைய தலைமுறையினரின் முன்நோக்குகளை அரசாங்கக் கொள்கைகளில் இணைத்து, அவர்களின் பங்களிப்பு மற்றும் பிரதிநிதித்துவத்தை அனைத்து மட்டங்களிலும் உறுதி செய்வது முக்கியம். சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை நிலையான வளர்ச்சிக்கு இளைஞர்கள் பங்களிக்கக்கூடிய சில முக்கிய துறைகள்”என்று ஆளுநர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு ‘சந்தைப்படுத்துவதற்கான உந்துதல்’ பயிற்சியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், இளைஞர்களுக்கு மென்மையான திறன் பயிற்சி அளிப்பதைத் தவிர, புகழ்பெற்ற நிறுவனங்கள் அல்லது தனியார் கூட்டுறவு நிறுவனங்களில் பணிகளைப் புரிவதற்கும் அவர் செய்ய பரிந்துரைத்தார். மேலும் பாரமுல்லாவில் உள்ள கண்டுபிடிப்பு, மற்றும் பயிற்சி மையம் இளைஞர்களின் திறமைக்கு வலுச்சேர்ப்பதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் பொழுதுபோக்கு வசதிகளுடன் மிஷன் இளைஞர் மையங்களை நிறுவவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் கல்வித் துறையுடன் ஒருங்கிணைந்து டிஜிட்டல் நூலகங்களை அமைக்கவும் மிஷன் யூத் தலைமை நிர்வாக அதிகாரியிடம் ஆளுநர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனைவிடவும் வெவ்வேறு திட்டங்களின் நன்மைகள் குறித்து இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்கான மையங்களை அமைப்பதற்கும் அதற்கான வழிமுறைகளும் நிறைவேற்றப்பட்டன.

இளைஞர்களுக்கு மனோ-சமூக ஆதரவை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஆளுநர் சின்ஹா ஒவ்வொரு பிரிவிலும் எட்டு மாவட்டங்களில் ஆலோசனை மையங்களை அமைக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாற்றுத்திறனாளி இளைஞர்களின் நலனுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்த ஆளுநர் சின்ஹா, யூ.டி.யில் மெகா முகாம்களை ஏற்பாடு செய்யுமாறு பணித்தார்.

மிஷன் இளைஞர்கள் திட்டத்தன் கீழ் கீழ், 18முதல் 35 வயதுக்குட்பட்ட 5,000 இளைஞர்கள் உள்ளடக்கப்பட்ட, தற்போதுள்ள திட்டங்களுக்கான அணுகல், திறமை, டிஜிட்டல் உலகத்துடன் இணைத்தல், வாழ்வாதார ஆதரவு மற்றும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைத்தல் ஆகியவை வழங்கப்படும் என்றும் கூறினார்.

சமூக அடிப்படையிலான தொழில்முனைவோரின் மேம்பாட்டிற்காக, 2021-22 காலப்பகுதியில் 50 மாதிரி சமூக தொழில் முனைவோர் பிரிவுகளை நிறுவுவதற்கான இலக்கையும் ஆளுநர் நிர்ணயித்தார்.

அத்துடன் மருத்துவ முகாமைத்துவத்தில் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதன் அவசியத்தை நிவர்த்தி செய்து, பல்வேறு துறைகளில் பல்வேறு தொழில்நுட்ப படிப்புகள் மூலம் குறைந்தது ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்