(எம்.எம்.சில்வெஸ்டர்)
இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பமாகிறது. ஒன்லைன் ஊடாக எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை வீரர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்யும் முடியும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடிய கிரிக்கெட் வீரர்கள், முதற்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள உள்ளூர் அல்லது வெளிநாட்டு வீரர்கள் இப்போட்டித் தொடருக்காக தங்களது பெயர்களை பதிவு செய்ய தகுதியுடையவர்கள் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த முறை 5 அணிகள் விளையாடப்படவுள்ளதுடன், ஏற்கனவே நடத்தப்பட்ட போட்டித் தொடரில் விளையாடிய பிரதான வீரர்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடந்த முறை கண்டி டஸ்கர்ஸ் அணியின் தலைவராக செயற்பட்ட குசல் பெரேரா கொலம்போ கிங்ஸ் அணியின் பிரதான வீரராக பெயரிடப்பட்டுள்ளார்.
தம்புள்ள வைக்கிங் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த நிரோஷன் திக்வெல்ல, கண்டி டஸ்கர்ஸ் அணியின் பிரதான வீரராக பெயரிடப்படுள்ளார். கோல் கிளேடியேட்டர்ஸ் அணியின் பிரதான வீரராக தனுஷ்க குணதிலக்கவும், தம்புள்ளை வைக்கிங் அணியின் பிரதான வீரராக தசுன் ஷானக்கவும் பெயரிடப்பட்டுள்ளனர். இதேவேளை, ஜெப்னா ஸ்டேலியன்ஸ் அணியின் பிரதான வீரராக சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டுள்ளார்.
இப்போட்டித் தொடரில் பிரதான வீரராக பெயரிடப்படுள்ள வீரருக்கு 60 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதி வழங்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதுடன், இப்போட்டித் தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 29 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM