விஜய் நடிக்கும் 'Beast'படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

By Gayathri

22 Jun, 2021 | 05:27 PM
image

தளபதி விஜய்யின் பிறந்தநாளை ஒட்டி அவர் நடிப்பில் தயாராகி வரும் 'பீஸ்ட்' என்ற படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பில் இருந்த தளபதி விஜய் நடிக்கும் 'தளபதி 65' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. 'Beast' என ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டிருந்த அப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விஜய் இரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இருப்பினும், ஃபர்ஸ்ட் லுக்கில் விஜய்யின் கையில் நவீன ரக துப்பாக்கியுடன் தோற்றமளித்தது குறித்து திரை ஆர்வலர்களால் வெகுவாக விமர்சிக்கப்பட்டன. குறிப்பாக ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கப்பட்டிருந்ததும், ஏற்கனவே இதே பெயரில் கொரிய நாட்டு திரைப்படங்கள் வெளியானதையும் இரசிகர்கள் சுட்டிக்காட்டி ஃபர்ஸ்ட் லுக்கிற்கு எதிரான விமர்சனங்கள் இணையத்தில் வைரலாகின.

இதனை உணர்ந்த படக்குழுவினர், இன்று புதிய போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். இதனால் மனதளவில் உற்சாகமடைந்த விஜயின் இரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

சன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க, தளபதி விஜய்யுடன் நடிகை பூஜா ஹெக்டே, நடிகர் யோகிபாபு, விடிவி கணேஷ், நடிகை அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மனோஜ் பரம்ஹம்ஸா ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்திற்கு, அனிருத் இசை அமைக்கிறார்.

விஜய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதால் சோர்வடைந்து இருந்த விஜய்யின் இரசிகர்களுக்கு, இரண்டாவது போஸ்டர் உடனடியாக வெளியிடப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right