பாதையை மாற்றுமா இந்தியா?

By Gayathri

21 Jun, 2021 | 04:28 PM
image

ஹரிகரன்

கொரோனா தொற்றுப் பரவலினால் முடங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, கடந்த வாரம் இரண்டு சந்திப்பு வாய்ப்புகள் கிடைத்திருந்தன. ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன், புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது.

இன்னொன்று இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடந்த சந்திப்பு. ராஜபக்ஷ அரசாங்கம் நெருக்கடியான சூழலை எதிர்நோக்கியுள்ள கட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விடுக்கப்பட்ட அழைப்பு யாராலும் எதிர்பார்க்கப்படாத ஒன்று.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று கிட்டத்தட்ட 19 மாதங்களாகின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்கும் எண்ணம் அவருக்கு ஒருபோதும் வந்ததில்லை. ஜனாதிபதியாகத் தெரிவாக முன்னர், கூட்டமைப்புடன் பேசி பிரச்சினைக்கு தீர்வுகாண முயற்சிப்பேன் என்று கூறியவர், தனிச் சிங்கள மக்களின் வாக்குகளால் தெரிவான பின்னர், கூட்டமைப்பைத் திரும்பியும் பார்க்கவில்லை.

முற்றாக அவரை நிராகரித்த வடக்கையும் அவர் எட்டியும் பார்க்கவில்லை. பல்வேறு அரசியல் நெருக்கடிகள் வந்தபோது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் நேரடியாகப் பேசித்தீர்க்க கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொண்டபோதும் அதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை.

பல பிரச்சினைகள் தொடர்பான ஜனாதிபதிக்கு இரா.சம்பந்தன் எழுதிய கடிதங்களுக்கும் கூட, மரியாதை நிமித்தமாகவேனும், பதில் வழங்கப்பட்டதில்லை. இந்நிலையில் பங்காளிக் கட்சிகள், கூட்டாளிகளின் நெருக்கடியைச் சந்திக்க ஆரம்பித்த ஜனாதிபதி, திடீரென கூட்டமைப்பைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுத்து அழைப்பு விடுத்திருந்தார்.

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி எழுப்பிக் கொண்டிருந்த நிலையில், அரசாங்கம் தற்போதைய அடக்குமுறைப் போக்கை தொடர்ந்து முன்னெடுத்தால், எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அதனை வீட்டுக்கு அனுப்பும் வேலையை முன்னெடுப்போம் என்று சுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பு எம்.பிக்கள் பலரும் கூறிக் கொண்டிருந்த நிலையில், இந்த அழைப்பு அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-20#page-1

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்