எம்.எஸ்.தீன்
இலங்கை முஸ்லிம்களின் மீது பௌத்த இனவாதிகள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை திட்டமிட்ட வகையில் முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் முஸ்லிம்களின் பொருளாதாரம், அரசியல், மத விழுமியங்களின் மீது தாக்குதலை மேற்கொண்ட சம்பங்கள் ஏராளமாக நடைபெற்றுள்ளன.
முஸ்லிம்களின் வாழ்விடங்களையும் குறிவைத்து தாக்குதல்கள் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களின் மீது இத்தகைய பௌத்த இனவாத செயற்பாடுகள் இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே நடைபெற்று வந்துள்ளபோதிலும், ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களின் மீதான கெடுபிடிகளும், பௌத்த இனவாதிகளின் எதிர்ச் செயற்பாடுகளும் அதிகமாகவே இருந்து வருகின்றன.
முஸ்லிம்களை இனவாதிகளாகவும், பயங்கரவாதிகளாகவும், நாட்டுப்பற்று இல்லாதவர்களாகவும் காட்டுவதற்குரிய செயற்பாடுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் வடக்கு, கிழக்கு தமிழர்களின் மீது அவ்வப்போது இலக்கு வைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டே வந்துள்ளது. இதனால் அப்பகுதி வாழ் சமூகங்கள் பலத்த, பின்னடைவுகளையும் சந்தித்துள்ளர்கள்.
இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பலர் பல வருடங்களாக சிறைகளில் உள்ளார்கள். அவர்களை விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை. அவர்களின் மீதான விசாரணைகள்கூட முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்று அவர்களின் உறவினர்களும், தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பகிரங்கமாகவே தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான நிலையில் இப்பயங்கரவாத தடைச் சட்டம் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களின் மீது தாக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடையவர்கள், பயங்கரவாத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று பல முஸ்லிம்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.
பயங்கரவாத தடைச் சட்டம் சிறுபான்மையினரை இலக்கு வைத்து நடைமுறைப்படுத்தப்படுவதாக சர்வதேச நாடுகளும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையும், ஐ.நா.பொதுச்சபையும், சர்வதேச மன்னிப்பு சபையும் பகிரங்கமாகவே இலங்கையின் மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளன.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-20#page-2
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM