என்.கண்ணன்

அமெரிக்க காங்கிரஸ் பிரேரணை குறித்த விவாதங்கள் கொழும்பில் நடந்து கொண்டிருந்த சூழலில், ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில், இலங்கை தொடர்பான ஒரு தீர்மானம் சந்தடியில்லாமல் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரும் அந்த தீர்மானம், ஏற்கனவே வாக்குறுதி அளித்தபடி பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தவறி விட்டது என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்திருக்கிறது.

அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது உள்ளிட்ட 27 வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை வழங்கப்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டும் அந்தத் தீர்மானம், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை மீளப் பெறுவது குறித்து ஐரோப்பிய ஆணையம் ஆராய வேண்டும் என்றும் கூறுகிறது.

இதில் இலங்கை அரசாங்கத்துக்கு இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குதல். இரண்டாவது ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை காப்பாற்றிக் கொள்ளுதல்.

இந்த இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையல்ல. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தொடர்புபடுத்தப்பட்டவை. ஏற்கனவே மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மனித உரிமைகள் கரிசனையைக் காரணம் காட்டி, ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கையிடம் இருந்து பறித்திருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம்தான், ஐரோப்பிய ஒன்றியத்துடன் போராடி அந்தச் சலுகையை 2017இல் மீளப்பெற்றுக் கொண்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது உள்ளிட்ட மனித உரிமைகள் அடங்கலான 27 சர்வதேசப் பிரகடனங்களுக்கு இணங்குவதாக இலங்கை கொடுத்த வாக்குறுதிக்கு அமையவே, இந்தச் சலுகை மீள வழங்கப்பட்டது.

இப்போது, இந்த வரிச்சலுகையை இலங்கை இழக்கின்ற ஆபத்து தோன்றியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் 628 உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க 15 பேர் மட்டும் எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். 40 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-20#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.