எம்.எம்.மின்ஹாஜ்

இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (01) சிங்கப்பூர் விஜயம் செய்யவுள்ளார்.

இந்திய மன்றத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றே பிரதமர் சிங்கப்பூர் விஜயம் செய்யவுள்ளார். இதன்பிரகாரம் சிங்கப்பூர் ஷென்கிலா ஹொட்டலில் அன்றைய தினம் நடைபெறவுள்ள இந்து சமுத்திர மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் விசேட உரையாற்றவுள்ளார்.

இந்த மாநாட்டிற்கு இந்து சமுத்திர வலயகத்தின் பிரதான நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு, பொருளாதார, கலாசார மற்றும் சுற்றாடல் போன்ற விடயங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளன.

இந்த மாநாட்டிற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். 

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தில் அவரது பாரியார் மைத்திரி விக்கிரமசிங்க உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடதக்கது.