கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட பார்வையாளர்களை அடுத்த ஆண்டு நடைபெறும் பீபா உலகக் கிண்ணத்தில் கலந்துகொள்ள கட்டார் அனுமதித்துள்ளது.

வளைகுடா அரபு அரசு 2022 நவம்பரில் நான்கு வார காலப் பகுதியில் பீபா உலகக் கிண்ண போட்டிகளை நடத்தவுள்ள நிலையில், உலக கால்பந்து அமைப்பின் தலைவர் ஃபிஃபா போட்டிகள் முழு அரங்கங்களில் பார்வையாளர்களை உள்ளடக்கும் வகையில் நடைபெறும் என்று முன்னதாக கூறியுள்ளார்.

இந் நிலையில் கட்டார் பிரதமர் காலித் பின் கலீஃபா பின் அப்துல்ஸீஸ் அல் ஞாயிற்றுக்கிழமை அரச செய்தி நிறுவனமான கியூ.என்.ஏ.விடம், கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட மக்கள் கட்டார் உலக கிண்ணத்தை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

அதேநேரம் 2022 உலகக் கிண்ணத்தை பார்வையிட நாட்டிற்கு வரும் பார்வையாளர்களுக்கு ‍தடுப்பூசி செலுத்துவதற்காக ஒரு மில்லியன் டோஸ் கொவிட் -19 தடுப்பூசிகளை பெற நாங்கள் தற்போது ஒரு நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

கட்டார் அதிகாரிகள் முன்னதாக கொவிட்-19 தொற்று இல்லாமல் போட்டிகளை நடத்த முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.