தேசியன்

நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் பகுதியில் அமைந்துள்ளது வெள்ளைஓயா தோட்டம். அங்கு கொரோனா தொற்றாளர்கள் அதிகம் இனங்காணப்பட்டதால் தோட்டம் சுகாதாரப் பிரிவினாரால் கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு மேல் முடக்கப்பட்டது.

தோட்ட எல்லையில் பொலிஸார் காவல் கடமைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தோட்டத்துக்குள் எவரும் உள்நுழைய முடியாது. எவரும் வெளியேறவும் முடியாது. அத்தியாவசிய தேவைகள் கருதி உணவு பொருட்களை அங்குள்ள கூட்டுறவு வர்த்தக நிலையத்துக்கு கொண்டுச் செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகின்றது.

அங்குள்ள ஒரு கர்ப்பிணிப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றார். குழந்தையையும் பிரசவிக்கின்றார். ஆனால் அவரை பார்வையிட கணவர் உட்பட குடும்பத்தார் எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. முடக்கப்பட்ட தோட்டத்துக்குள்ளிலிருந்து எவருக்கும் வெளியேற அனுமதியில்லை.

ஏனென்றால் யாருக்கு தொற்று இருக்கின்றது என்பது தெரியாது. யாரையாவது வைத்தியசாலைக்குள் அனுமதித்தால் அது வேறு விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்பது சுகாதாரப் பிரிவினரின் கருத்து. அடுத்தடுத்து இங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதால் கிட்டத்தட்ட 25 நாட்களுக்கு மேல் தோட்டம் முடக்கப்பட்டது. 

ஆனால் தோட்டத்தில் கொழுந்து பறிக்கும் செயற்பாடுகள் எந்த வித பாதிப்புமின்றி முன்னெடுக்கப்பட்டன. எனினும் தொற்றால் முடக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரம் இழக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. தொற்றால் வருமானத்தை இழந்தவர்களுக்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் இம்முறை சமுர்த்தி பயனாளிகளுக்கே வழங்கப்பட்டன.

தனியார் துறையானாலும் அரச சேவைகளில் தம்மை இணைத்துக்கொண்டவர்களானாலும் தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அரசாங்கம் மூலம் கிடைக்கும் உணவுப் பையும் இவர்களுக்கு கிடைத்திருக்கவில்லை.

இந்த காரணங்களால் குறித்த தோட்ட மக்கள் கடந்த 15 ஆம் திகதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். தோட்டம் தனிமைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் தமக்கு அரசாங்கத்தாலும் பிரதேச அரசியல்வாதிகளாலும் எந்தவித நிவாரண உதவிகளும் கிடைக்கவில்லை என்பது இவர்களின் குற்றச்சாட்டாக இருந்தது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-20#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.