புதிய அரசியலமைப்பு விடயங்கள் தொடர்பில் மட்டும்தான் பேச்சுக்களை நடத்துவோம் என்ற சம்பந்தனின் எழுத்துமூல நிபந்தனையுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு நடைபெறுவதற்கு ஏற்பாடாகி இருந்தது.

இந்தச் சந்திப்பு தொடர்பான விடயங்கள் சுமார் ஒருமாதகாலமாக மிக இரகசியமாக பேணப்பட்டு வந்தன. கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிப்பீடம் ஏறி 19 மாதங்கள் கழிந்ததன் பின்னர் முதன்முதலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுக்களை முன்னெடுக்க தயாராகியமையால் ஒருசில வாரங்கள் முன்னதாகவே விடயம் பற்றி கூட்டமைப்பு சார்ந்த செய்திகளை அறிக்கையிடும் எமது ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் கூட அமைதி காத்தே வந்திருந்தனர்.

இருந்தபோதும் திகதியும், காலமும் உறுதியான நிலையில் சந்திப்பு நடப்பதற்கு ஏற்பாடாகியிருந்த கடந்த புதன்கிழமைக்கு முன்னைய நாளான செவ்வாய்க்கிழமை காலையில் சந்திப்பு பற்றிய தகவல்கள் அதன் பின்ணியில் நடைபெற்ற விடயங்கள் அனைத்தும் அறிக்கையிடப்பட்டன.

இந்நிலையில் குறித்த தினமன்று மாலை 7மணியளவில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து சம்பந்தனுக்கு தொலைபேசியினூடாக வந்த அழைப்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பு பிறிதொரு தினத்திற்குபிற்போடப்பட்டுள்ளது என்றும் ஆனால் ஜனாதிபதி நிச்சயமாக சந்திப்பார் என்றும் தகவல் அளிக்கப்பட்டது.

அத்தகவலை சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன், அடைக்கலநாதன் என்று வரிசையாக தொலைபேசி வாயிலாக அழைப்பெடுத்து பகிர்ந்துக் கொண்டார். குறித்த தருணத்தில் மாவை சேனாதிராஜா, சித்தார்த்தன் ஆகியோர் கொழும்பை அடைந்திருந்தனர்.

யாழ்ப்பாணம் சென்றிருந்த சுமந்திரனும் கொழும்பு திரும்பியிருந்தார். செல்வம் அடைக்கலநாதன் மதவாச்சியை அண்மித்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தார். இந்தச் சந்திப்பு திடீரென்று இரத்துச் செய்யப்பட்டு பிற்போடுவதற்குக் காரணம் என்னவென்று பலதரப்பினரும் கேள்விகளை தொடுத்தபோதும் உரிய பதில்கள் சம்பந்தப்பட்ட இருதரப்பினரிடமிருந்தும் கிடைத்திருக்கவில்லை. 

குறிப்பாக இராஜதந்திர மட்டங்கள் இந்தச் சந்திப்பு இரத்தானமைக்கான காரணத்தினை அறிவதில் அதிகளவு ஈடுபாட்டினைக் காண்பித்திருந்தன. எனினும் குறித்த சந்திப்பு இடம்பெறாமைக்கு பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டிய விடயம் சம்பந்தமாக சம்பந்தன், சுட்டிக்காட்டல்களுடன் எழுதிய கடிதம் தான் காரணம் என்று முதலில் கூறப்பட்டது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-20#page-5

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.