(எம்.மனோசித்ரா)

டெல்டா உருமாறிய கொரோனா வைரஸின் ஆரம்ப அறிகுறிகளுடன் நபரொருவர் பிரிதொரு பிரதேசத்திலும் இனங்காணப்பட்டுள்ளார்.

கொழும்புயில் மாதிவெல பிரதேசத்தில் உள்ள பிரகதிபுர என்ற பகுதியில் இந்த வைரஸ் மாறுபாடு காணப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது.

டெல்டா வைரஸ் மாறுபாடு ஏனைய பிரதேசங்களில் பரவியுள்ளதா என்பது தொடர்பிலான பரிசோதனைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் , இந்த வைரஸ் மேற்குறிப்பிட்ட பிரதேசத்தில் இருப்பதற்கான ஆரம்ப அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹெரத் தெரிவித்துள்ளார். 

எனினும் இதுவரை இது தொடர்பில் உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சுகாதார அதிகாரிகள் இது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.