-சுபத்ரா

கடல்சார் கண்காணிப்பு இலங்கையைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுக்க ஆரம்பித்துள்ளது. இந்தியப் பெருங்கடலின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருப்பதால், இலங்கைத் தீவு தனது கடல் எல்லையை மாத்திரமன்றி, இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பாக, சுதந்திரமான, கடற்பயணத்தை உறுதிப்படுத்த வேண்டிய முக்கியமான பொறுப்பிலும் உள்ளது.

அதனால்தான் அமெரிக்காவும், இந்தியாவும், சீனாவும், ஜப்பானும், அவுஸ்ரேலியாவும் இலங்கையைத் தங்களின் கடல்சார் பாதுகாப்புக் கூட்டாளியாக வைத்திருப்பதற்கு விரும்புகின்றன. அதற்குத் தேவையான உதவிகளையும் வழங்கி வருகின்றன.

இந்த நாடுகள் அனைத்துமே, இலங்கை கடற்படையை கடலோரக் காவல்படையை பலப்படுத்தவதற்குத் தேவையான தொழில்நுட்பங்களையும், கப்பல்கள் மற்றும் படகுகளையும் வழங்கியிருக்கின்றன.

ஆனாலும் இலங்கையைப் பொறுத்தவரையில் கடல் சார் கண்காணிப்பு என்பது சிக்கலானதும், இன்னமும் முழுமையாக உறுதிப்படுத்த முடியாததாகவும்தான் இருந்து வருகிறது. இதற்குப் பிரதான காரணம், இலங்கையை சுற்றியுள்ள இந்தியப் பெருங்கடல் விசாலமானது.

இந்த விசாலமான கடற்பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள், சுதந்திரமான கப்பல் பயணங்களுக்கான அச்சுறுத்தல்கள் அதிகம் இருப்பதால், கண்காணிப்பை இறுக்கமாக பேண வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது.

அதனைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும்கூட, அண்மைக்காலத்தில் இலங்கை கடற்பரப்பில் அல்லது அதற்கு அருகே அடுத்தடுத்து கப்பல்களில் ஏற்பட்ட தீவிபத்துகள், ஆபத்தான அணுசக்தி பொருட்களை ஏற்றிய கப்பல்களின் உள்நுழைவு, போதைப்பொருள் கடத்தல்கள், கடற்கொள்ளை, சட்டவிரோத குடியேற்றப் பயணங்கள் போன்ற அச்சுறுத்தல்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

இவ்வாறான நிலையில்தான், இலங்கை விமானப்படைக்கு அண்மையில் கிடைத்துள்ள மூன்று அன்ரனோவ் 32 பி விமானங்களை கடல்சார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்போவதாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அறிவித்துள்ளார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-20#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.