மாற்றமும் ஏமாற்றமும்

21 Jun, 2021 | 12:27 PM
image

-சத்ரியன்

 

“மறைந்த மாதுளுவாவே சோபித தேரரும், நாரஹேன்பிட்டிய அபயராமய விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரும் ஆட்சி மாற்ற அரசியல் ஊக்கிகளாக இருந்த போதும், ஆட்சி மாற்றங்களால் எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியாமல் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள்”

கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல்களின் போது, நாட்டில் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துவதில் முக்கியமான காரணிகளாக இருந்தவர்கள் இரண்டு பௌத்த பிக்குகள்.

ஒருவர் நாட்டில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கும் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்காகவும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார். அவர் தான், மறைந்த மாதுளுவாவே சோபித தேரர்.

மற்றவர், நிறைவேற்று அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காக ஆட்சி மாற்றத்தை ஊக்குவித்தவர். அவரே, நாரஹேன்பிட்டிய அபயராமய விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர்.

இந்த இரண்டு பேருமே, அரசியல் ஊக்கிகளாக இருந்த போதும், ஆட்சி மாற்றங்களால் எதிர்பார்த்த இலக்கை எட்ட முடியாமல் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள்.

2015 ஆட்சி மாற்றத்துக்கு – மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக நிறுத்தி மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடிப்பதற்கு மாதுளுவாவே சோபித தேரர் தான் பிரதான காரணியாக விளங்கினார்.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-06-20#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right